இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் – எங்கு தெரியுமா?

Default Image

இனிமேல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு புதுச்சேரியில் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதம் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுவது தான் விபத்துக்கு காரணம் ஆகிறது என்பதால் அரசாங்கமும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. வித்தியாசமான தண்டனைகளையும் கொடுத்து வருகிறது, இருந்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது. நமது உயிரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாமும் ஒத்துழைப்பு  கொடுக்கவேண்டும்.

தற்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் 100, 200 என காவலர்கள் அபராதம் விதிப்பது வழக்கம் ஆகிவிட்டது. ஆனால் புதுச்சேரியில் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதம் ஓட்டுனர் உரிமமும் முடக்கப்படும் என புதுச்சேரி அரசு செயலாளர் ஜெய்சங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்