ஓட்டுநரே இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் – ஒப்பந்தம் கையெழுத்தானது!
ஓட்டுநர் இன்றி இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.946.92 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
சென்னையில் ஓட்டுநரே இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் ரூ.946.92 கோடிக்கு கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.946.92 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கான மொத்த கால அவகாசம் 40 மாதங்கள் என்றும் ஒப்பந்தத்தின்படி முதல் மெட்ரோ ரயில் 2024-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடுமையான பாதைகள், ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகளும் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.