வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒட்டுநரின் மண்டையை உடைத்த சுங்கச்சாவடி பெண் ஊழியர்…!ஒட்டுநர்கள் கொதிப்பு
- கிருஷ்ணகிரி மாவட்ட சுங்கச்சாவடியில் வாக்குவாத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரின் மண்டை உடைப்பு
- பெண் ஊழியர் தாக்கியதால் சக ஓட்டுநர்கள் முற்றுகை
காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் அசோக் இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியை ஓட்டி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட சுங்கச்சாவடியில் பர்கூரை சேர்ந்த செண்பகவள்ளி என்ற கட்டண ஊழியர் லாரியை மறித்து நிறுத்தினார்.இந்நிலையில் ATM ஸ்வைப்பிங் கருவியை வாங்கிய அசோக் ரகசிய எண்ணை மெதுவாக பதிவு செய்துள்ளார். இதனால் கடுப்பாகிய பெண் ஊழியர்க்கும் லாரி ஓட்டுநர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த செண்பகவள்ளி ஸ்வைப்பிங் கருவியால் லாரி ஓட்டுநரின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்.அடி பலமாக விழுந்ததால் மண்டை உடைந்து இரத்தம் வெளியேறியுள்ளது.இதனை அறிந்து சக ஓட்டுநர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமதானம் செய்தனர்.