“லைசன்ஸ் கட்டணம்”ஆன்-லைனில் செலுத்துங்கள் வருகிறது புது ரூல்…!!!லஞ்சத்துக்கு ஆப்பு..!!
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி வரும் அக்டோபர் 1முதல் நடைமுறைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 1 ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் இனி ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி தொடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும்https://parivahan.gov.in/parivahan/ என்கிற இணையத்தளத்தில் ஓட்டுநர் உரிமம் வேண்டியவர்கள் விண்ணப்பித்துக் கட்டணத்தை வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இனி நேரடியாக ஆன்லைனில் செலுத்துவதன் மூலமாக லட்சம் தடுக்கப்படும் என்று தெரியவருகிறது.
DINASUVADU