பேருந்துகளை கவனமாக இயக்குங்கள்.! ஓட்டுநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்.!

வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறிவுரைகளை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாளை முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. இதனிடையே, வெளியூர் செல்லும் பேருந்துகள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பஸ்களின் உள்ளேயும், வெளியேயும் கிருமிநாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்தது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக பேருந்து சேவை இயங்காததால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வில் இருந்து வந்த நிலையில், தற்போது நாளை முதல் வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறிவுரைகளை வழங்கி உள்ளது. அதில், கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும்.
மேலும், நள்ளிரவு- காலை 04.00 மணி வரை நடத்துனர்கள் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை அதிகம் இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.
பேருந்துகளை கவனமாக இயக்க அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்.#TNGovt pic.twitter.com/AiG7yzV6Kl
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025