கிராமப்புறங்களிலும் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கிராமப்புறங்களிலும் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இன்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சென்னைக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது . கிராமப்புறங்களிலும் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது .பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.