நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் – அன்புமணி ராமதாஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால் அனைத்து மாவட்டங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளித்தல், நீா்நிலைகளில் கொசு முட்டைகளை அழித்தல் மற்றும் வீடுகளில் தேங்கும் நல்ல நீரில் கொசுப்புழுக்கள் வளருவதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது டெங்கு பரிசோதனைகள் அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் தான் உருவாகின்றன. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தான் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பணியாகும்.

நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

நேரு குறித்து அவதூறு பேச்சு: ‘இது போல் மீண்டும் நடக்காது’… மன்னிப்புக் கேட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன்!

நேரு குறித்து அவதூறு பேச்சு: ‘இது போல் மீண்டும் நடக்காது’… மன்னிப்புக் கேட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன்!

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி  என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…

8 hours ago

சென்னையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்… மெரினா கடற்கரை மூடல்!

சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…

8 hours ago

எஃப்.ஐ.ஆர் வெளியானது எப்படி? வருண்குமார் பெரிய அப்பாடக்கரா? – சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…

9 hours ago

மணிப்பூர் வன்முறை சம்பவம்… பகிரங்க மன்னிப்பு கேட்ட முதல்வர் பிரேன் சிங்.!

மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…

10 hours ago

நேரு பற்றி அவதூறு பேச்சு: “அவரை கைது செய்ய வேண்டும்” செல்வப்பெருந்தகை கோரிக்கை!

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…

11 hours ago

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு.!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…

11 hours ago