நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் – அன்புமணி ராமதாஸ்

Default Image

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால் அனைத்து மாவட்டங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளித்தல், நீா்நிலைகளில் கொசு முட்டைகளை அழித்தல் மற்றும் வீடுகளில் தேங்கும் நல்ல நீரில் கொசுப்புழுக்கள் வளருவதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது டெங்கு பரிசோதனைகள் அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் தான் உருவாகின்றன. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தான் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பணியாகும்.

நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy
RRB alp exam