மது குடிப்பது அதிகரித்ததே ,டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம் என்று அமைச்சர் தங்கமணி பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.அப்பொழுது திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ், மது விற்பனையால் தமிழகத்தில் ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று பேசினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கமணி பேசுகையில், மக்கள் மது குடிப்பது அதிகரித்துள்ளது.இது தான் டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.மேலும் படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது என்றும் தமிழகத்தில், ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அரசு கூறவில்லை என்றும் பேசினார்.
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…