மது குடிப்பது அதிகரித்ததே ,டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம் – அமைச்சர் தங்கமணி விளக்கம்
மது குடிப்பது அதிகரித்ததே ,டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம் என்று அமைச்சர் தங்கமணி பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.அப்பொழுது திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ், மது விற்பனையால் தமிழகத்தில் ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று பேசினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கமணி பேசுகையில், மக்கள் மது குடிப்பது அதிகரித்துள்ளது.இது தான் டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.மேலும் படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது என்றும் தமிழகத்தில், ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அரசு கூறவில்லை என்றும் பேசினார்.