டேய்..வாடா..குடித்துவிட்டு மோதியவரின் கைவிரலை கடித்து துப்பிய கொடூரம்..!
குடிபோதையில் அடித்துக்கொண்ட இரண்டு குடிகாரார்களில் ஒருவர் மற்றொருவரது விரலை கடித்து துப்பி மிக மூர்க்கமாய் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த புலியகுளம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் நடந்துள்ளது இந்தச் சம்பவம் இது தொடர்பான காட்சிகள் எல்லாம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் குடிபோதையில் அடித்துக்கொண்ட இரண்டு குடிகாரார்கள் இருவர் மிக நீண்ட நேரமாக சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர். சண்டை அதிகமாகவே ஆத்திரத்தில் இருவரில் ஒருவர், மற்றொருவரின் ஆட்காட்டி விரலை வாயால் கடித்துத் துப்பி உள்ளார். இருவரையும் அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்று உள்ளனர்.ஆனால் குடிபோதையில் இருவரும் இருந்ததால் அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.தன்னிலை மறந்து கைவிரல் காயம் பட்டது கூடத்தெரியாமல் சண்டையிடும் காட்சிகளை கண்டு மக்கள் முகம் சுளிக்கின்றனர்.