தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை இன்று முதல் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு மதுபான கடைகள் தான் ஈட்டித் தருகிறது என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள் இன்றளவும் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் மூடுவதற்கு வழி தேடினால் மதுபானக் கடைகளை முழுவீச்ச்சில் இயக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது என்று மக்கள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் தான் அரசு மதுபான கடைகளான டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இனிமேல் பீரின் விலை ரூ10, ஒரு ஆஃப் விலை ரூ20க்கு,ஒரு குவார்ட்டரின் விலை ரூ10, ஒரு ஃ புல் விலை ரூ40 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வைப்போல கடந்த 2017ல்விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் பீர் விலையானது கடந்த 2014 ஆண்டுக்குப் பின் சரியாக 6 வருடத்திற்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…