“கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்”- முதல்வர் பழனிசாமி ட்வீட்
கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும் என அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
ராமேஸ்வரத்தை பூர்விகமாக கொண்ட டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை படைத்தார். அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என கலாமிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்” என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என தெரிவித்துள்ளார்.
“கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்” என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன். #Abdulkalam pic.twitter.com/JvsVnoXnfm
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 15, 2020