கனவை மிகப்பெரியதாய் காணுங்கள்… கற்றுக்கொள்ளுங்கள்.. ரிஸ்க் எடுங்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் வாழ்க்கையில் பலமுறை தோல்வியை சந்தித்துள்ளேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னையில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இன்று நீங்கள் பெற்ற பட்டம் உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்தது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறீர்கள்.
பேஷன் அல்லது பேஷன் தொழில்நுட்பம் என்பது மனித இனப் பரிமாற்ற வளர்ச்சியில் பங்கு கொண்டது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா மிக முக்கிய இடத்தில் இருக்கப்போகிறது. இலக்கை நோக்கி நாடு என்னும் வேகமாக செல்ல வேண்டி உள்ளது. 18-ஆம் நூற்றாண்டு முதல் ஜவுளி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
அரசை விட நாடு மிகப்பெரியது. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் பலவகையான திறமைகள் புதைந்துள்ளது. எனவே கனவை மிகப்பெரியதாய் காணுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், ரிஸ்க் எடுங்கள். எந்த துறையில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுங்கள். நான் வாழ்க்கையில் பலமுறை தோல்வியை சந்தித்துள்ளேன். ஆனால் அந்த தோல்விகள் என்னை ஒருபோதும் வீழ்த்த அனுமதித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.