7 பேர் விடுதலை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் ஆளுநரிடம் தள்ளி விடுவது ஏற்புடையதல்ல என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா , நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு உத்தரவால் அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். விடுதலை பண்ண வேண்டும் என்பதை நீதிமன்றம் சொல்ல வேண்டும். எனவே 7 பேர் விடுதலை குறித்து கவர்னரிடம் நீதிமன்றம் மாற்றியுள்ளது எனக்கு ஏற்புடையது அல்ல.
7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் ஏன் சொல்லக்கூடாது என கேள்வி எழுப்பினார். இந்த7 பேர் விடுதலையில் காங்கிரஸ், திமுக ஒரு கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள். உயிரிழந்த அதிகாரிகள் எல்லாம் தமிழர்கள் இல்லையா..? இன்று உடம்பில் குண்டு பாய்ந்த நிலையில் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள் இல்லையா..? திராவிட இயக்கங்களும் தமிழ், தமிழன் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம் என தெரிவித்தார்.
மேலும், திமுக 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் 7 பேரை விடுதலை செய்யக்கூடாது எனக் கூறுகிறது என ஹெச் ராஜா கூறினார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …