திராவிட சிந்தனை கொண்ட அரசிடம் இந்த 5 முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் – சசிகலா

Published by
லீனா

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார்.

சசிகலா அறிக்கை 

தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், வி.கே.சசிகலா அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் திமுகவினருக்கு மகிழ்ச்சியை அளிக்குமே தவிர சாமானிய மக்களுக்கு எந்த பலனும் சென்று சேர போவது இல்லை. ஏற்கனவே திமுக ஆட்சியில் இது போன்ற அலங்கார அறிக்கைகளைப் பார்த்து தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை பார்க்கும்போது இது சாமானிய மக்களின் நலறுக்கான பட்ஜெட்டாக தெரியவில்லை. இது கார்பரேட்களுக்கு உதவிடும் பட்ஜெட்டாகத்தான் தெரிகிறது.

திராவிட சிந்தனை கொண்ட அரசானது ஐந்து முக்கிய அம்சங்களை எந்நாளும் கடைபிடிக்க வேண்டும் என்பதை தம் ஒப்பற்ற தலைவர்களின் மூலம் நான் கற்றுக் கொண்டது. அதாவது

(1) அன்றாடம் ஒவ்வொரு மனிதனின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அரசாக இருக்க வேண்டும்.

2) மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பேணி காத்திட வழிவகை செய்ய வேண்டும்.

3) கடைக்கோடி தமிழனுக்கும் தரமான கல்வி கிடைத்திட உறுதி செய்திட வேண்டும்.

4) அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.

5) கிடைத்த வேலைவாய்ப்பு பறிபோகாத வகையில் பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டும்.

இந்த ஐந்து முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு தான் ஒரு அரசானது நிதி ஒதுக்கீடு செய்வதை வரையறுக்க வேண்டும்.

திமுக அரசிடம் இதையெல்லாம் நாம் எதிர்பார்க்கமுடியாது 

தமிழகத்தில் தற்போது உள்ள நிதி பற்றாக்குறையானது கொரோனா; சார்ந்த காரணங்களாலும் மற்றும் பல்வேறு உலக நிகழ்வுகளாலும் ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். இருந்தபோதும் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் ஒரு தாய் எவ்வாறு தனது வாயையும், வயிற்றையும் கட்டி தன் பிள்ளைகளை காப்பாற்றுவாரோ அது போன்று, ஒரு அரசு தன் சொந்த தேவைகளை குறைந்து கொண்டு மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் செயல்படவேண்டும் ஆனால் திமுக அரசிடம் இதையெல்லாம் நாம் எதிர்பார்க்கமுடியாது. எனவே

“நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்”.

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தமிழக மக்கள் இந்த ஆட்சியாளர்களை நிராகரிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார்.

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

23 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

50 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago