திராவிடம் என்பது தமிழ் அடையாளமாக மாறிவிட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி
தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா,கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான்; ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் அதிகாரத்கிற்காக மொழி மற்றும் சாதி அடிப்படையிலும், சாதியில் உள்ள உட்கட்டமைப்புகளை வைத்து அரசியல் செய்வார்கள்; ஆனால் இந்தியா என்பது அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமை தான் என தெரிவித்துள்ளார்.