திராவிட மாடல் புத்தகம் வெளியீடு…!
அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திராவிட மாடல் புத்தகத்தை வெளியிட்டார்.
விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பள்ளி நாட்கள் தொடங்கி திமுகவில் இணைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், திமுக பொருளாளர் டிஆர் பாலுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திராவிட மாடல் புத்தகத்தை வெளியிட்டார். இதனை டி.ஆர்.பாலு எம்.பி பெற்றுக்கொண்டார். இந்த புத்தகம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரைகளின் மைய கருத்துக்களை அடங்கிய, 148 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஆகும்.