இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!

விழுப்புரம் திரௌபதி அம்மன் திருக்கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்வதாக அமைச்சர் சேகர் பாபு குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

Sekarbabu

சென்னை :  விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் புனரமைப்பு பணிகள் மற்றும் சில சட்ட சிக்கல்களால் மூடப்பட்டிருந்தது. இதனால், உள்ளூர் பக்தர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள், கோயிலை உடனடியாக திறக்க வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். அதைப்போல, பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள், இந்த விவகாரத்தை அரசியல் களமாக பயன்படுத்தி, திமுக அரசு இந்து மத நம்பிக்கைகளை மதிக்கவில்லை என்று விமர்சித்து வந்தனர்.

இந்த சூழலில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஒரு வார காலத்தில், அதாவது ஏப்ரல் 7, 2025க்குள், இந்த திருக்கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக முழுமையாக திறக்கப்படும் என இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” விழுப்புரம் திரௌபதி அம்மன் திருக்கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அரசு அதற்கு இடம் கொடுக்காது. இன்னும் ஒரு வார காலத்தில் அந்த திருக்கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும். அதற்கான அனைத்து பூஜைகளும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது ஒரு புனிதமான இடம், இதை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது தவறு. திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் கோயில்களை புனரமைத்து, பக்தர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கி வருகிறோம். விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பும் அதன் ஒரு பகுதிதான்.

கோயில் திறப்பிற்கு முன்னதாக, புனித நீர் தெளித்தல், ஹோமங்கள், மற்றும் கும்பாபிஷேகம் போன்ற பூஜைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அறநிலையத்துறை அதிகாரிகள், புரோகிதர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். “கோயிலை திறப்பதற்கு முன், அனைத்து மரபுகளும் பின்பற்றப்படும். பக்தர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்,” என்றும் அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்