விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ்.!
கனமழையை காரணம் காட்டி நெல் கொள்முதலை நிறுத்தி வைத்துள்ள நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து மீண்டும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்துவிட்டது.
இதனால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. மேலும் அறுவடை செய்யப்பட்டு இருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்து உள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவினார் டாக்டர் ராமதாஸ், ‘ மழையை காரணம் காட்டி, தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதலை நிறுத்தி வைத்து வருகின்றனர் என்ற செய்தி வருகிறது. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்கவும் முடியாமல், மழையில் பாதுகாக்கவும் முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
மீண்டும் நெல்கொள்முதலை உடனடியாக தொடங்கி நெல்மூட்டைகளை உரிய பாதுகாப்போடு மத்திய அரசின் ஒப்புதலோடு ஈரப்பத விதிமுறைகளை தளர்த்தி கொள்முதல் செய்து விவசாயிகள் நலம் காக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.