“மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி ஆத்திரத்தில், மருத்துவரின் கழுத்து, முதுகில் சரமாரியாக கத்திக் குத்து விழுந்துள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் தான் இந்த கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.
இந்த சம்பவம் தொடர்பாக, 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது, கழுத்து, மார்பு பகுதிகளில் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் “பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். விக்னேஷின் தாய்க்கு இங்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, வேறு ஏதோ தனியார் மருத்துவமனை அவரிடம் கூறியதால் விரக்தியில் இவ்வாறு செய்துள்ளதாக” கூறினார்.