கலாம் என்னும் கனவுகளின் காதலன்..! பிறந்த நாளை தேசிய மாணவர்கள் தினமாக கொண்டாட கோரிக்கை
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய மாணவர்கள் தினமாக கொண்டாட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேதகு முன்னாள் குடியரசு தலைவர் இந்தியாவின் ஏவுகணை நாயகன் மாணவர்களின் ஹீரோ தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்து நாடு உங்கள் கையில் என்று முழங்கிய சங்கு.உங்களின் கடைசி ஆசை என்னவென்று கேட்டதற்கு மாணவர் மத்தியில் உரையாடி கொண்டிருக்கும் போது ஒரு ஆசிரியராக என் உயிர் பிரிய வேண்டும் என்று கூறியனார்.
அவர் கூறியது போல தான் தன் கடைசி பயணத்தை மாணவர் மத்தியிலே முடித்து கொண்ட நம்பிக்கை நாயகன்.ஒரு வார்டு கூட மேம்பர் எவ்வளவு பகட்டாக இருப்பார் என்பதை எல்லோரும் கண்டுள்ளோம் ஆனால் ஒரு குடிமகன் இருந்த போதும் -இந்தியாவின் முதல் குடிமகன் ஆன பின்னும் ஒரு பகட்டோ,பாவனையோ அவரிடம் தென்பட்டதே இல்லை ,பெரிய பங்களா இல்லை ,பல ஆயிரம் கோடி சொத்து இல்லை,சொந்தமாக ஒரு கார் கூட வைத்து கொள்ளவில்லை வைத்து கொண்டது எல்லாம் தன் தேசத்தின் மீதும்,மாணவர்கள் மீதும் வைத்த நம்பிக்கை என்ற சொத்து மட்டுமே.
கள்ளம் கபடமற்ற அந்த முகத்தில் புன்னகை ததும்ப குழந்தைகளிடம் கொஞ்சி பேசும் அழகே தனி மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் தன்னுடைய நம்பிக்கை அணித்தையும் வைத்தவர்.மதங்களை கடந்த தீர்க்க தரிசி கலாம்
மாணவ மற்றும் இளைஞர் சமுகம் இவரை தங்களின் ஹீரோவாக தான் பார்க்கின்றனர் நேசிக்கின்றனர்.அவருக்கும் குழந்தைகள் என்றால் அலாதி பிரியம் அவர்களை பார்த்தவுடன் கேள்வி கேட்க துவங்கள் ,கனவு காணுங்கள் என்று கூறுவார் இன்றும் அந்த மாமனிதரை நினைத்தாலே கண்களில் நீர் கசிய துவங்கி விடுகிறது.இது அனைவர் இடத்திலும் அவர் சாதித்தது.
‘கனவுகளின் காதலன்’ அதனால் தான் என்னவோ அவருடைய தனிப்பட்ட இல்லறத்தில் காதல் இல்லை.அதற்கு பதிலாக தன் தேசத்தையும் ,மக்களையும் ,மரங்களையும்,மாணவர்களையும் காதலித்த காதலன்
அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற ஒரு தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் அண்ணலின் பிறந்த நாள் அக்டோபர் மாதம் 15 தேதி கொண்டாடப்படுகிறது.தமிழக அரசு அவருடைய பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றது.
இந்நிலையில் ஆந்திர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த பாஸ்கர் ரபோலு அப்துல் கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு தான் எழுதிய கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
மேதகு கலாம் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என்பதற்கு உங்களின் பதில் என்ன..?