அரபிக்கடலில் உருவானது டவ்-தே புயல்…..! 18-ம் தேதி கரையை கடக்கிறது…!
அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது.
அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டவ் – தே புயல் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவான நிலையில், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக, நாளையும், நாளை மறுதினமும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.