#Breaking: “தடுப்பூசி குறித்த சந்தேகமா? இந்த எண்ணுக்கு அழையுங்கள்”- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!
சென்னையில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கட்டுபாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாள் ஒன்றுக்கு 2,500-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், சில கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று தொடர்பாகவும், தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 044-46122300, 044-25384520 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்கலாம் என்று கூறினார்.
மேலும், கடந்த ஆண்டை விட கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறிய அவர், சென்னை மக்கள் பயன்பெற இந்த கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.