பூம்புகார் அருகே தருமகுளத்தில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தன்ராஜ் இவரது மனைவி ஆஷா (45). மகன் அகில் (24), மருமகள் பெயர் நிக்கில் ஆகியோர் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் கதவை தட்டி ஹிந்தியில் பேசியுள்ளனர். நகை தொடர்பாக யாரோ வந்திருப்பதாக நினைத்து, கதவை திறந்துள்ளனர்.
வீட்டில் உள்ளே சென்ற 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் (25) ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் தப்பினர்.
மேலும், அடகு கடை உரிமையாளர் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமராவை எடுத்து தப்பி சென்ற வடமாநில கொள்ளை கும்பலை குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், கொலை அரங்கேற்றிய வட மாநிலத்தை சார்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…