முன்னேறும் பெண்களுக்கு வலு சேர்க்கும் ‘தோழி விடுதிகள்’ திட்டம்; முதல்வர் ஸ்டாலின்.!
தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள தோழி விடுதிகள், முன்னேறும் மகளிருக்கான முகவரி என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு இடங்களிலிருந்து வெளியூர்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தங்க அதுவும் மலிவு விலையில் குறிப்பிட்ட வசதிகளுடன் தமிழக அரசு, தோழி விடுதிகள் எனும் பெயரில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, வேலூர், திருநெல்வேலி ஆகிய 9 நகரங்களில் அமைத்துள்ளது.
இதன்படி இந்த மகளிர் விடுதியில் தனியார் விடுதியில் இருப்பது போன்றே, பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா வசதி, பார்க்கிங் வசதி, இலவச WiFi வசதி, பொழுதுபோக்கு அமசங்களுடன், அயனிங் வசதி மற்றும் நல்ல சுகாதாரமான தண்ணீர் உட்பட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தோழி விடுதிகள் – இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி!
மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது!… https://t.co/fm6i4EdPMQ
— M.K.Stalin (@mkstalin) July 30, 2023
இது குறித்து முதல்வர் ஸ்டாலின், தோழி விடுதிகள் முன்னேறும் மகளிருக்கான முகவரி என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மகளிரின் முன்னேற்றத்திற்கு மேலும் வலு சேர்க்கும் இந்த திட்டம், வரலாற்றின் பக்கங்களில் நிலைகொள்ளும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.