செத்துப்போன டோரா..!வருத்தத்தில் மக்கள் ..! நடந்தது என்ன..!
பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரம் டோரா காலமானதாகவும், அவர் மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும் இணையத்தில் ப்ரேக்கிங் நியூஸ் போட்டு அதிரவைக்கும் அளவிற்கு காமெடி செய்துவருகின்றனர். உண்மையில் டோராவிற்கு என்னதான் நடந்தது? ஏன் இந்த சலசலப்பு… தீவிர சிகிச்சை குறித்து தீவிர விசாரணையில் தெரியவருமா? என்பதை பார்க்கலாம். டோராவின் வாய்ஸ்-இல் சொல்ல வேண்டுமானால் ‘இப்ப நம்ம எங்க போறோம்? கதை படிக்கப்போறோம்….’
2010 ஆண்டு சுட்டி டீவியில் தொடங்கப்பட்ட காட்டூன் தொடரான ’டோராவின் பயணங்கள்’குழந்தைகளை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த தொடரில் டோரா என்ற கதாப்பாத்திரத்தில் வரும் சுட்டிப்பெண் டோரா, கையில் ஒரு மேப்பை வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்று, நல்ல விஷயங்களையும், பெரியவர்களிடம் குழந்தைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அழகிய கீச் குரலில் எடுத்துரைக்கும்.
https://twitter.com/Ragavi973/status/1003209412419317760
டோராவிற்கு தோஸ்தாக புஜ்ஜி என்ற குரங்கு சுற்றுத்திரியும். இவர்களுக்கு எதிரியாக ஒரு குள்ளநரி கதாபாத்திரமும் இந்த நிகழ்ச்சியில் உண்டு. ‘குள்ளநரி திருடக்கூடாது, குள்ளநரி திருடக்கூடாது, குள்ளநரி திருடவேக் கூடாது’ என்பது தான் டோராவின் ஃபேவரைட் டையலாக். சாப்பிடாத குழந்தைகளும் டோராவை பார்த்தால் சாப்பிட்டுவிடும் அந்த அளவிற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து வந்த டோரா காலமானதாகவும், அவர் மோசமான உடல்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வீடியோ வைரலாகி வருகிறது.
https://twitter.com/CreativeHead55/status/1003328656058474497
மேலும் சிலர் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களில் தங்களது ஸ்டேட்டஸ்களை ப்ரேக்கிங் டோராகவாக வைத்து வருகின்றனர் . இவ்வளவு ஏன்? இன்னும் பலர் சீரியஸாக இறங்கி #DoraArmy #save dora #pray for dora என ஹேஷ்டேக்களை உருவாக்கி தங்களது இரங்கல் அனுதாபங்களை தெரிவித்துவருகின்றனர்.
https://twitter.com/ela_twittz/status/1003205341985660928
டோராவிற்கு நடப்பது என்ன?
டோராவின் நிகழ்ச்சியில் வரும் குள்ளநரியால் தாக்கப்பட்ட டோரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், டோராவின் இந்த நிலையை பார்த்தவுடன் புஜ்ஜி கண்ணீர் வடிப்பதாகவும் ப்ரேக்கிங் டெம்லேட்டில் ஒரு வீடியோவை வெளியிட்டு சீரியஸாக காமெடி செய்து வருகின்றனர் நம்ம நெட்டிசன்கள். தாக்கிய குள்ளநரி தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது. மேலும் குற்றவாளி குள்ளநரியை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறையினரை கிண்டலடித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி டோராவை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து நிவாரணமாக ரூ. 10 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்றும் கிண்டலடித்துள்ளனர். டோரா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும் 90S கிட்ஸ் என இணையவாசிகள் செய்யும் சேட்டை தாங்கமுடியவில்லை.
சின்னப்புள்ள தனமா பன்னிட்டிருக்க … மரியாதையா எழுந்து ஸ்கூலுக்கு போ … ???????????? #PrayForDora #doraarmy pic.twitter.com/jJZ1RNjX5f
— அன்பான ராட்சசி????????♀️???? (@Kamali13811258) June 3, 2018
மேலும் சிலர் டோரா இறந்ததாக சமூகவலைதளங்களில் சில சமூக விரோதிகள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் அவற்றை யாரும் நம்பவேண்டாம் என அண்மையில் தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகளும் ஒப்பிட்டு கலாய்த்துவருகின்றனர். அதுமட்டுமின்றி டோரா மறைந்துவிட்டதாக வதந்திகள் பரவுவதால், அவர்களின் நெருங்கிய நண்பரான சோட்டா பீமு(கார்ட்டூன் தொடரில் வரும் கதாபாத்திரம்) க்கு விஷயம் தெரிந்ததால், கலவரங்கள் வெடிக்க தொடங்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டோலாக்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது என தமிழக அரசை சீண்டுகின்றன. இன்னும் ஒரு சிலர் துணை வட்டாச்சியரின் அனுமதியின் பேரில் டோரா குள்ளநரியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
டோரா குள்ளநரி தாக்கி முடியாம கெடக்கு நீ பாத்த….????????????????#DoraArmy #DoraArmy #PrayforDora pic.twitter.com/wI5ezttisq
— ????????Mr::வில்லாதி வில்லன்…???????? (@Rjtwitz_1996) June 3, 2018
https://twitter.com/CreativeHead55/status/1003328374163496960
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள டோரா, விரைவில் குணமடைய கையில் தீ சட்டியுடன் ஷின்சான் தீ மிதிப்பது போன்ற வீடியோவையும் உருவாக்கியுள்ளனர். (ஷின்சான் மற்றொரு கார்ட்டூன் தொடர்). தமிழகத்தில் நிகழ்ந்த அப்போலோ நினைவலைகளை புரட்டிப்பார்க்கும் வகையில், டோரா இட்லி சாப்பிட்டார், ஜூஸ் குடித்தார். நலமாக உள்ளார் என நெட்டிசன்களின் சேட்டை அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
ஏன் இந்த அலப்பறைகள்?
தீடிரென ஏன் இந்த டோரா புராணங்கள் ட்ரெண்ட்! முன்பு மிகவும் பிரபல ஷோவான டோராவிற்கு போட்டியாக சமோசா, சோட்டா பீம், ஷின் சான் என பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வந்துவிட்டன. எனவே குழந்தைகளின் கவனம் திசைத்திரும்பிவிட்டது. டோராவை அவ்வளவாக இப்போது குழந்தைகள் பார்ப்பதில்லை. செத்துப்போன டோராவிற்கு காரணங்கள் இப்போது புரிகிறதா?