தமிழகத்தில் இப்பவுள்ள காலகட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வெளியில் சென்று வருவது மிகவும் அச்சத்தையும், பயத்தையும் தருகிறது, எங்கு எது நடக்கும் என்ற பயத்திலே சென்று வருகின்றனர். இதனால் அதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு தரும் வகையில் காவலன் செயலியை கடந்த மாதம் காவல்துறை அறிமுகம் செய்யப்பட்டது. இது கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள், வெளியில் செல்லும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பாதுகாப்பாக வீடு திரும்ப இந்த அப்ளிகேஷன் உதவியாக இருக்கிறது.
இத்திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 10 லட்சம் பேர் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பெண்கள், முதியவர்களுக்கு எப்போது உதவி தேவைப்படுகிறதோ அப்போது இந்த அப்ளிகேஷனில் உள்ள எஸ்.ஓ.எஸ் பட்டனை அழுத்தினால் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உதவி கேட்டவர்களுக்கு, அந்த இடத்துக்கு போலீஸ் வரும்.
மேலும் உதவி கேட்டவரின் உறவினரின் செல்போனுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலன் செயலி மூலம் புகார் பெற்று போலீசார் கைது செய்து நடவடிக்கையும் எடுத்தனர். இதை நிகழவே குறித்து சென்னை மக்களின் பாராட்டுக்களை பெற்றனர். இந்த செயலி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெசன்ட்நகர் சீனியர் சிட்டிசன் குரூப் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வீட்டிற்கு வருவதற்கு ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் கேட்டு பிரச்சனை செய்தார். நானும் என் மனைவியும் நடைபாதையில் நின்றபோது காவலன் செயலி குறித்த ஞாபகம் வந்தது. உடனே அதனை பயன்படுத்தி போலீஸ் உதவியை கேட்டேன். தகவல் தெரிவித்த அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வந்தது. அதன் பிறகு போலீஸ் உதவியுடன் ஆட்டோவில் வீட்டிற்கு வந்தோம். மூத்த குடிமக்களுக்கு இந்த செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவலன் செயலி இருப்பது போலீஸ் பாதுகாப்பு நம்மோடு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…