இனி கவலை வேண்டாம்.! விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க அறிமுகப்படுத்திய நவீன ‘ட்ரோன்’.!
- விளைநிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- உளுந்து, மக்காசோளம், கம்பு போன்ற பயிர்களுக்கு இந்த முறையில் மருந்து அடிக்கும்போது நல்ல முறையில் மகசூல் கிடைக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயம் பண்ணுபவர் பொதுவாக கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க, ஏக்கருக்கு சுமார் கால் லிட்டர் மருந்து தேவைப்படும். ஆனால், இவ்வகை ட்ரோன்களைக் கொண்டு மருந்து தெளிக்கும்போது 110 மிலி இருந்தாலே போதுமானதாக உள்ளது. இந்த முறையில் மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.700 மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உளுந்து, மக்காசோளம், கம்பு போன்ற பயிர்களுக்கு இந்த முறையில் மருந்து அடிக்கும்போது நல்ல முறையில் மகசூல் கிடைப்பதாக கூறும் விவசாயிகள், தமிழக அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு இந்த நவீன ட்ரோன்களை வழங்க வேண்டும். எனவும், கோரிக்கை வைத்துள்ளனர்.