இனி கவலை வேண்டாம்.. இவர்களுக்கு உதவி மையம் – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

Default Image

ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகள் நடத்தப்படும் என  சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மதி வேந்தன் சுற்றுலா துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குறிப்பாக சுற்றுலா பயணிகளின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள், சென்னையில் நடந்தது போல நம்ம ஊரு திருவிழா போன்று அனைத்து பகுதிகளிலும் நடத்துவது குறித்து பரிசீலினை செய்யப்படும். சென்னை தீவி திடலில் உள்ள டிரைவ் – இன் உணவகம் ரூ.50 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். கேரவன் வாகனம் நிறுத்தும் இடம் பூங்காக்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் அமைக்கப்படும். பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

சென்னையில் மலர், காய்கனிகள் மற்றும் பனைப்பொருட்கள் கண்காட்சி கோடை விழா ரூ.25 லட்சத்தில் நடத்தப்படும். கலை நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகள் நடைபெறும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சென்னை தீவுத்திடல் மேம்படுத்தப்படும். குற்றாலம் நவீன வசதியுடன் ரூ.15 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்றும் திருவள்ளுவர் சிலைக்கு லேசர் ஒளியூட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த 7 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய படகு இறங்குதளம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்