Edapadi palanisamy [Image source : EPS]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது மக்களவைத் தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்த இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ” மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவானதும், அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யலாம். இன்று மாலை வரை அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும். வேட்பாளர்களை தேர்வு செய்து வையுங்கள் கூட்டணி முடிவானதும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மிக கனமழை!
கூட்டம் முடிந்த நிலையில் மாவட்ட செயலாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து தனித்தனியாக ஆலோசிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக உடனான அதிமுக கூட்டணி முறிந்து நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் யார், எந்த கட்சியை இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் மறுபுறம் பாஜக தங்கள் தலைமையில் கூட்டணியை அமைக்க அதற்கான பணிகளை ஈடுபட்டு வருகின்றனர்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…