தமிழகத்தை வன்முறைக்களமாக்க முயற்சி செய்யாதீர்! – பீட்டர் அல்போன்ஸ்
அரசியல் கட்சி தொண்டர்களே சட்டம் ஒழுங்கை பார்த்துக்கொள்வர் என்றால் காவல் துறையும் நீதிமன்றங்களும் எதற்கு? என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்நாட்டில் தேசத்துக்கு எதிரான சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வர நம் தொண்டர்களுக்கு வெறும் அரை மணி நேரம் போதும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஒரு அமைதியை விரும்பக்கூடிய கட்சி. அடுத்த இரண்டு நாட்கள் பார்ப்போம். தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை செயல்பாட்டை பார்த்துவிட்டு எங்களது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து பீட்டர் அது போல் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்களை தடுத்து நிறுத்த எங்களுக்கு ஐந்து நிமிடம் போதும்” என்று அவர்கள் சொன்னால் நாடு என்ன ஆகும்? தமிழகத்தை வன்முறைக்களமாக்க முயற்சி செய்யாதீர்! அரசியல் கட்சி தொண்டர்களே சட்டம் ஒழுங்கை பார்த்துக்கொள்வர் என்றால் காவல் துறையும் நீதிமன்றங்களும் எதற்கு? பொறுப்பற்ற பேச்சு!’ என பதிவிட்டுள்ளார்.
” உங்களை தடுத்து நிறுத்த எங்களுக்கு ஐந்து நிமிடம் போதும்” என்று அவர்கள் சொன்னால் நாடு என்ன ஆகும்?
தமிழகத்தை வன்முறைக்களமாக்க முயற்சி செய்யாதீர்!
அரசியல் கட்சி தொண்டர்களே சட்டம் ஒழுங்கை பார்த்துக்கொள்வர் என்றால் காவல் துறையும் நீதிமன்றங்களும் எதற்கு?
பொறுப்பற்ற பேச்சு! pic.twitter.com/4DLjTrqdvy— S.Peter Alphonse (@PeterAlphonse7) September 27, 2022