‘RSS உறுப்பினர்’ போல பேசக் கூடாது – ஆளுநர் மீது வைகோ காட்டம்!

Default Image

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

மேலும்,பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும், அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே எனவும் ஆளுநர் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில்,பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து ஆளுநர் ஆர்என்ரவி பேசி இருப்பது பாஜக,ஆர்எஸ்எஸ். தலைவர்கள் பேசுவது போல இருக்கின்றது.எனவே,ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல ஆளுநர் பேசக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும்,தனது அறிக்கையில்,”ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர்,எந்தத் அரசியல் கட்சியின் தத்துவ சாயல் தம் மீது விழுவதற்கு இடம் தரக் கூடாது என்றும் ஆனால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள்,அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றாமல்,அத்துமீறி செயல்பட்டு வருகின்றார்.குறிப்பாக,மத்திய பாஜக அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் குரலை எதிரொலிக்கின்றார்”, என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,ஆளுநர் ஆர்என் ரவி,ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்,பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஆபத்தான இயக்கம்,தீவிரவாத இயக்கம் என்று சாயம் பூச முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது எனவும்,மாறாக,உண்மையில்,பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நாட்டை சீர்குலைக்க முயற்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?,அதற்காகத்தானே மத்திய பாஜக அரசு தேசிய விசாரணை முகமை (NIA) எனும் அமைப்புக்கு அபரிதமான அதிகாரங்களை அளித்து இருக்கின்றது என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே,ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும்,தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் தரக் கூடாது என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்