ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!
விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும் நடனமாடவும்தான் தெரியும் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7) கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதாகவும், உயர்த்தப்பட்ட விலை இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு கண்டங்களை தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில், மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும்” என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அவருடைய கண்டனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் “கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்பப்பெறுமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம் சர்வதேச சந்தையில் 60 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்ட காரணத்தால் தான் இந்த விலையேற்றம் நடந்திருக்கிறது.
கேஸ் விலை உயர்ந்ததற்கு பெரிய அறிக்கையை ஒன்றும் தெரியாமல் விஜய் வெளியீட்டு இருக்கிறார். நான் பொதுவாகவே கேட்கிறேன் விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? பாமர மக்களுக்காக நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று விஜய் சொல்கிறார். பாமர மக்கள் சினிமா பார்க்க வருகிறார்கள். அவர்களுக்காக குறைந்த விலையில் அல்லது இலவசமாக கொடுங்கள் யார் தடுத்தார்கள்?
உங்களுக்கு லாபமென்றால் பேசமாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் தயவு செய்து பேச வேண்டாம். Demonetization மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தாரே, அப்படி விஜய் திரைத்துறையில் Black டிக்கெட்டை ஒழித்தாரா? விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும்அரசியலோ பொருளாதாரமோ தெரியாது. விஜய்க்கு இந்த விஷயங்கள் தெரியுமா? இல்லையா என்பதை அவரிடம் கேளுங்கள்” எனவும் காட்டத்துடன் தசை பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025