பிக் பாஸ் எடுத்து சமூகத்தை சீரழிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்
பிக் பாஸ் உள்ளிட்டவை எடுத்து சமூகத்தை சீரழிக்க கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நடிகர் கமல் ஹாசனை விமர்சித்துப் பேசினார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்.பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி,நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார்.இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் சொல்லலாமா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் அல்ல.நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவருடைய வேலை. ஏனென்றால் அந்த டிவி தொடர் பார்த்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுப் போய்விடுவார்கள்.புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல்கள் அருமையான பாடல்கள் அது மக்களுக்கு நன்மை பயக்கும் பாடல்கள் என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.இது குறித்து தொடர்ச்சியாக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அவராக தான் திருந்த வேண்டும்.சமூக சீரழிவிற்கு காரணமாக இருக்கின்றவர்கள் படங்கள் ,பிக் பாஸ் உள்ளிட்டவை எடுத்து சமூகத்தை சீரழிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.