சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை.!

Default Image

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை  வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக வலைதளத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பொய்யான செய்திகள் தினமும் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸஅப் உள்ளிட்ட நிறுவனங்கள் போலியான தகவலை பரப்புவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regulations பிரிவு 8-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, எந்த அங்கீகாரமும் இல்லாத சென்னை உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் என்பவர் சமூக வலைத்தளங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடித்துவிட்டதாக பரப்பி வந்துள்ளார். 

இந்த தவறான செய்தி பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால் அவர்மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அவர்களால் சென்னை, காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
seizure (1)
puducherry school rain holiday
Minister Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin