இவை அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் – எஸ்.பி.பி.சரண்!

Default Image

சமூக வலைத்தளங்களில் பரவி வரக்கூடிய அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் என எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது இறப்பு வரை அங்கு தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு எஸ்பிபி அவர்கள் சிகிச்சைக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அதிகப்படியான பில் கேட்டதாகவும், அதை கட்ட குடும்பத்தினரால் முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், எஸ்பிபி இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் கூட முழு பணத்தையும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கட்ட முடியாததால் அவரது உடலை கொடுக்காததால் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை கூட தர மறுத்ததாகவும் பின் குடியரசுத்தலைவரின் உதவியுடனே எஸ்பிபி சரண் அவர்கள் அவரது உடலை பெற்றுக் கொண்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள எஸ்பிபி சரண், கடந்த வெள்ளிக்கிழமை அப்பா காலமானார். இந்நிலையில் தற்போது பரவி வரக் கூடிய அனைத்து வதந்திக்கு ஒற்றை சொல்லில் சொல்ல வேண்டுமானால் அத்தனையும் பொய் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை தயவுசெய்து பரப்பாதீர்கள் தற்பொழுது நானும் மருத்துவமனை நிர்வாகமும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கை வெளியிடப் போகிறோம், இவ்வாறு ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பது எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. மேலும் எனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை செய்த சிகிச்சைகளுக்கும். உதவிக்கும் என்றுமே அவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என கூறியுள்ளார். நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு சென்று வந்தது போல கூட இல்லை குடும்பத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று வந்தது போல தான் இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rajinikanth -Manmohan singh
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat
BJP State president Annamalai Protest