மாநிலங்களில் ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி பயணத்தை முடித்து, தமிழ்நாடு திருப்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கர்நாடகா அரசு நாங்கள் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று இருக்கிறார்கள். மாநிலங்களில் ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கர்நாடக அரசு அணை கட்ட தீவிர, விஸ்தாரமான அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளக் குழு அனுமதி அளித்துள்ளது நியாயம்தானா என கேள்வி எழுப்பினேன். அதற்கு மத்திய அமைச்சர் அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்த காரணத்தினாலே அணையை கட்டிவிட முடியாது. அதற்கு பின் பல பிரச்சனைகள் உள்ளது, பல அனுமதிகள் தேவைப்படுகிறது என தெரிவித்தார் என கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும், நதிநீர் பிரச்னை தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…