மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள், கொடிகளை வைக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்த நாளை பரமக்குடியில் கொண்டாட உள்ள நிலையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அவரது அறிக்கையில், எனது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் நடக்கும் என் தந்தையின் சிலை திறப்பு விழாவில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள், கொடிகளை வைக்கக்கூடாது.இந்த விஷயத்தில் எந்த ஒரு காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டது என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…