என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே தவறாக பதிவிடாதீர்கள் ..  – தேமுதிக தலைவர் பிரேமலதா !..

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துருந்ததாக  தகவல் வெளியாகி இருந்தது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டு ஆலோசனையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி..!

தேமுதிக கட்சியன் ஆலோசனை கூட்டம் ஏழாம் தேதி  நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரும், பொதுச்செயலாரும் ஆன  பிரேமலதா அவரகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ஆளுநரின் செயலை குறித்தும் அத்துடன்  ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டையும் தெரிவித்தார்.

சட்டசபையில் ஆளுநரின் வெளி நடப்பு குறித்து பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ” ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு முறையும்  சட்டசபைக்கு வரும் பொழுது இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இது நாட்டுக்கும், மக்களுக்கும் ஆரோக்யமான விஷயம் கிடையாது. மேலும், ஆளுநரும் தமிழக அரசும் நகமும், சதையுமாக இணைந்து பயணித்தால் தான் நாட்டுக்கும், மக்களுக்கும் அது நல்லது.

இவர்கள் இருவரும் எதிரும், புதிருமாக இருந்தால் அதனால் பாதிக்க பட போவது தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆவார்கள். இது ஒரு வருந்ததக்க விஷயம்,  இது தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காதது எல்லாம் இன்று சட்டசபையில் நடந்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழக மக்களாகிய நம் அனைவருக்கும் ஏற்ப்பட்ட ஒரு தலை குனிவாகத்தான் நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

அதன் பின் கூட்டணி அலோசனை குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போது அவர் ஊடகங்கள் மீது குற்றச்சாட்டை வைத்தார். அவர் பேசுகையில், ” நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம், நான் தமிழில் தான் சொல்கிறேன், நாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே ஊடகங்கள் அதை தவறான கருத்தாக  பதிவை செய்கின்றனர்.

மீண்டும் நான் சொல்கிறேன், அன்று மாவட்ட கூட்டணியின் ஆலோசனை முடிவடைந்த உடன் நான் ஊடகங்களை அழைத்து பேசினேன். அதில், எங்கள் மாவட்ட செயலாளர்களுடைய கருத்துக்கள் இன்று கேட்கபட்டுள்ளது எனவும் இது முதல் ஆலோசனை கூட்டம் தான் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கும் எனவும் அப்போது நாங்கள் எங்கள் இறுதி முடிவை சொல்வோம். மேலும், இது ஒரு விவாதம் தான் முடிவு இல்லை எனவும் நான் தெளிவாக கூறி இருந்தேன்.

அதில் மாவட்ட செயலாளர்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்பது சில மாவட்ட செயலாளர்களின் கருத்தாக இருந்தது.  திமுக, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது வேறு சில செயலாளர்களின் கருத்தாக இருந்தது. அதே போல், 2014 ஆம் ஆண்டு நடந்ததை போல 14 சீட் அளித்து மரியாதையாக வரவேற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது செயலாளர்கள் கருத்தே ஆகும்.

ஆனால், இன்று அனைத்து ஊடகங்களும் 14+ 1 சீட் கொடுத்தால் தான்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்கள் கூட்டணி அமைப்பர் என்று பதிவிடுகிறீர்கள்.  இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அதில் முடிவு எடுக்கப்பட்டப்பின் அதிகாரப்பூர்வ தகவல் எப்போது வருகிறதோ அதுவே எங்களது இறுதி முடிவாக இருக்கும். அதனால், தவறான கருத்தை பதிவிடாமல் தயவு செய்து உண்மையான பதிவுகளை பதிவிடுங்கள், ” என்று தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்