மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது – கமல்ஹாசன்
மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.அவர் பேசுகையில்,அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது. இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும்.
இருபது வருடங்களாக சினிமா டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கூவிக் கொண்டு இருக்கிறேன்.தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது.குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன்.இளைஞர்களே என்னுடைய குடும்பம், இளைஞர்களே நாளைய தலைவர்கள்.மொழி ஒரு தொடர்பியல் கருவிதான். அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பேசினார்.