சாதாரண விஷயங்களை புரிதல் இல்லாமல் அரசியலாக்க வேண்டாம்..! – ஜி.கே.வாசன்
ஆளுநரை பொறுத்தவரையில் அவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என ஜி.கே.வாசன் பேட்டி.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆளுநரை பொறுத்தவரையில் அவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதை வெளிப்படுத்துகிறாரே தவிர யாருக்கும் எதற்கும் அவர் அழுத்தம் தரவில்லை. கோரிக்கையும் வைக்கவில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தவில்லை.
அப்படி யாராவது ஒரு கருத்தை வலியுறுத்தினால் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் அரசுக்கு உள்ளது. புரிதல் இல்லாமல் சாதாரண விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் உரையில், மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை என்பது ஏமாற்றம் தான் என தெரிவித்துள்ளார்.