மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே பல்கலைக்கழக விழாவில் எல் முருகன் பங்கேற்றார் என தமிழிசை தகவல்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகியிருந்தது நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டதை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் எல் முருகன் பங்கேற்றார். கல்வியை மேம்படுத்ததான் ஆளுநர்கள் முயற்சி செய்கிறார்கள். மத்திய அமைச்சர் முருகனை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்தது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாகதான் இருக்கும் என்பதால்தான்.
பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து உழைத்து எல் முருகன் அமைச்சராக உள்ளார். அவரின் வளர்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதை அரசியலாக்க எடுத்துக் கொள்ளாமல், மத்திய, மாநில அரசை சார்ந்தோர் ஆளுநருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக்களை குழந்தைகளுக்கு வழிகாட்டு விழாக்களாகக் கொண்டு செல்லவேண்டும். இதில் அரசியல் ஏதும் இல்லை. தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் இதைக்கூற உரிமை இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…