இடைத்தேர்தல் வெற்றி.! எதிர்க்கட்சிகளை முடக்கி விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி.! சசிகலா விமர்சனம்.!
இடைத்தேர்தல் தோல்வி குறித்து துவண்டு விட வேண்டாம். இது ஜனநாயக வெற்றி என்று திமுகவினர் மார்தட்டி கொள்கிறர்கள். – தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிட்ட இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வி அடைந்தார். டெபாசிட் மட்டுமே அவரால் வாங்க முடிந்தது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலா, இடைத்தேர்தல் தோல்வி குறித்து துவண்டு விட வேண்டாம். இது ஜனநாயக வெற்றி என்று திமுகவினர் மார்தட்டி கொள்கிறர்கள்.
ஆனால் இந்த வெற்றி மக்களை ஏமாற்றி, அவர்களை அடைத்துவைத்து, எதிர்கட்சியினரை முடக்கி பெற்ற வெற்றி. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுவே, மக்கள் விருப்பமும் கூட என ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்த தனது கருத்துக்களை சசிகலா பதிவிட்டுள்ளனர்.