தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி இல்லை.! அரசு அதிரடி உத்தரவு

நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும் தமிழக அரசு இதுவரையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 30 வரையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், பல்வேரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
அதன்படி, நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. தற்போதுவரையில் கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து அரசு இன்னும் ஆலோசிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை எனவும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.