தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் +2 பொதுத்தேர்வு இன்று தொடங்கவுள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 8 லச்சத்து, ஆயிரத்தி 401 மாணவர்கள் மற்றும் புதுவையில் 14ஆயிரத்தி 958 மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் நாளான இன்று , மொழிப்பாடம் நடைபெறவுள்ளது.
மேலும், இந்தாண்டு மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுகளை எழுதவுள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு நடக்கும் இந்த தேர்வு, காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1.15 வரை நடைபெறும். 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு, மார்ச் 24ஆம் தேதி முடிந்து, அதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என தேர்வு குழு அறிவித்தது.இந்த பொதுத்தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக தமிழக முழுவதும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
காப்பி, பிட் அடித்தல், விடைத்தாளை மாற்றி எழுதுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டால், மாணவர்கள் தேர்வு கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் முழுக்க தேர்வு எழுத தடைவிதிக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…