அணைய விடாதீர், நெருப்பை அரிப்பதில்லை கரையான்..! கலைஞர் நினைவு தினத்தையோட்டி வைரமுத்து ட்வீட்..!
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, முதல்வர் தலைமையில், கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில், அமைதி பேரணி நடைபெற்றது. இந்த நிலையில், கலைஞரின் நினைவு தினத்தையொட்டி, கவிஞர் வைரமுத்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன. கலைஞர் ஒரு தத்துவம். இன்று இருமொழிக் கொள்கை என்ற தத்துவம். தாய்மொழிக் காப்பு என்ற கேடயமாகவும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற ஈட்டியாகவும் இந்த நிமிடம் கலைஞர் வாழ்கிறார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு; அணைய விடாதீர், நெருப்பை அரிப்பதில்லை கரையான்’ என பதிவிட்டுள்ளார்.
கலைஞர் ஒரு தத்துவம்#KalaignarForever | #கலைஞர் #கலைஞர்100 | #Kalaignar100 pic.twitter.com/eR4gVqeiaX
— வைரமுத்து (@Vairamuthu) August 7, 2023