கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை- கராத்தே தியாகராஜன்
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் கராத்தே தியாகராஜன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளேன்.
ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை’ ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை. பலமுறை என்னை காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர், எதற்காக நீக்கினார்கள் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.