அமைச்சர் பாஸ்கரனா ?அப்படி ஒரு அமைச்சரையே தெரியாது – பிரேமலதா பேச்சு

அமைச்சர் பாஸ்கரன் என்று ஒரு அமைச்சர் இருக்கிறார் என தெரியவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டி ஒன்றை அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது .விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் பாஸ்கரன் கூறியது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு அவர் பதில் கூறுகையில், தமிழக அமைச்சரவையில் அப்படி ஒரு அமைச்சர் இருக்கிறார் என தெரியவில்லை. அவர் பெயரும் அவருடைய இலாகாவும் எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.பிரேமலதா இவ்வாறு கூறியது அதிமுக -தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025