இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று திமுக மகளிரணி தலைவர் எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், யுவன் ஷங்கர் ராஜா I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டிசர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து, தற்போது #ஹிந்தி_தெரியாது_போடா எனும் ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியது.
இந்நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று கூறி அந்த டி சர்ட் அணிந்தவர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…